அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்தது தொடர்பாக 5 பேர் மீது வழக்கு

விருதுநகர், ஆக.26: விருதுநகரில் சிறுமிக்கு திருணம் நடத்தி வைத்தது தொடர்பாக மணமகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On :26 ஆகஸ்ட் 2015, 11:50 am

விருதுநகர், ஆக.26: விருதுநகரில் சிறுமிக்கு திருணம் நடத்தி வைத்தது தொடர்பாக மணமகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் அகமது நகரைச் சேர்ந்த ராமையா மகன் சுரேஷ்(21). இவருக்கும் சிவகாசி அருகே மாரனேரியைச் சேர்ந்த சீனிச்சாமியின் 15 வயது மகளுக்கும் கடந்த 24-ம் தேதி அகமது நகரில் உள்ள நகராட்சி திருமண அரங்கத்தில் திருமணம் நடைபெறுவதாக சமூக நலத்துறை அதிகாரிக்கு தகவல் வந்ததாம்.

அதன் அடிப்படையில் வட்டார விரிவாக்க அலுவலர் சோலையம்மாள் சம்பவ இடத்திற்கு சென்றாராம். அப்போது, அவர் செல்வதற்கு முன்பாகவே சிறுமிக்கு திருமண நிகழ்வு முடிந்ததாம். இதைத் தொடர்ந்து இருவீட்டார்களிடையே வயது குறைந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது குற்றமாகும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைள்ளார். ஆனால், திருமணம் நடந்து முடிந்துவிட்டது பெண்ணை அழைத்துக் கொண்டு செல்வதாக தெரிவித்தனராம்.

அதைத் தொடர்ந்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு செவ்வாய்கிழமை வரவழைத்து குறிப்பிட்ட வயதை அடையாதவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது குற்றாமாகும் என தெரிவித்தும் அவர்கள் கேட்கவில்லையாம்.

இது தொடர்பாக விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விரிவாக்க அலுவலர் சோலையம்மாள் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சிறுமியை திருமணம் செயத விருதுநகர் அகமது நகரைச் சேர்ந்த மணமகன் சுரேஷ், அவரது தந்தை ராமையா, தாயார் சங்கரம்மாள் மற்றும் மாரனேரியைச் சேர்ந்த சிறுமியின் தந்தை சீனிச்சாமி, தாயார் பாண்டியம்மாள் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதோடு, திருமணமான சிறுமியை பாண்டியன் நகரில் உள்ள பெண் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் போலீஸார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் ஒப்படைத்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.