அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை: 6 சவரன் நகை திருட்டு

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து 6 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On :27 ஆகஸ்ட் 2015, 12:26 pm

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து 6 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் சாமியார் கிணற்று தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(28). இவரது மனைவி ஜோதி. இருவரும் புதன்கிழமை மாலையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டி விட்டு திறவுகோளை பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டு சென்றார்களாம். பின்னர் இரவு 11 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர்.

 அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட கதவு திறந்து கிடந்துள்ளது. இதைப் பார்த்து தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து உள்ளே நுழைந்து பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு அதன் உள்ளே இருந்த 6 சவரன் நகையையும்  யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தது தெரிவந்தது.

இது குறித்து உடனே மேற்கு காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.