விருதுநகர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகையை திருடியதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணை பாண்டியன்நகர் காவல் நிலைய போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(40). தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்வதற்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி உமாமகேஸ்வரியிடம் சாவியை கொடுத்து விட்டு செல்வார்களாம். அதையடுத்து, மாலையில் வந்து பார்க்கையில் பீரோவில் வைத்திருந்த தோடு, மோதிரங்கள் உள்ளடக்கிய இரண்டரை சவரன் நகையை காணமல் போயிருந்தது.
அதேபோல், அதற்கடுத்த வீட்டைச் சேர்ந்த சகாயராணி(39) வேலைக்கு செல்கையில் வீட்டை பூட்டிவிட்டு உமாமகேஸ்வரியிடம் சாவியை கொடுத்துச் செல்வாராம். அங்கும் மாலையில் வந்து பார்க்கையில் 3 சவரன் நகையை காணமல் போயிருந்ததாம். இது குறித்து அக்கம் பக்கத்தில் வீசாரணை செய்ததில் உமாமகேஸ்வரிதான் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டிற்குள் சென்றதாக தகவல் தெரியவந்தது.
உடனே இது குறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் முத்துராமலிங்கம், சகாயராணி ஆகியோர் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் உமாமகேஸ்வரி கைது செய்து அவரிடம் இருந்து நகைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! எதிா்க்கட்சி உண்மை முகம் அம்பலம்: ரேகா குப்தா
இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு

பிடிவாதம் தளர வேண்டும்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

