அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் காவலரைத் தாக்கிய இருவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் காவலரைத் தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர்

News image
Updated On :1 டிசம்பர் 2015, 4:43 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் காவலரைத் தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசி தனி ஆயுதப்படையில் காவலராக வேலை செய்து வருபவர் முத்து முனீஸ்வரி (27). இன்று இவர் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவில் பணியில் இருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் மது போதையில் வந்த இருவர், வாகனத்தை போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தியுள்ளார்கள். அப்போது அங்கிருந்த காவலர் முத்து முனீஸ்வரி, அவர்களிடம் வாகனத்தை ஓரமாக வேறு இடத்தில் நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமுற்ற இவர்கள் முத்து முனீஸ்வரியைத் தாக்கியுள்ளார்கள்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் முத்து முனீஸ்வரி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து காவலரைத் தாக்கிய சித்தாலம்புத்தூரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராதாகிருஷ்ணன் (35) மற்றும் மாரியப்பன் மகன் வீரபெருமாள் (35) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.