அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தொடக்க நிலையில் எண்களின் இடமதிப்பு 20 சதவீத மாணவருக்கே தெரிகிறது

தொடக்க நிலையில் 3 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட திறனாய்வுத் தேர்வில் எண்களின் இடமதிப்பு 19.54 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே தெரிகிறது என அனைவருக்கும் கல்வி இயக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி கூறினார்.

News image
Updated On :5 டிசம்பர் 2015, 5:11 am

கோ.ஜெயக்குமார்

தொடக்க நிலையில் 3 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட திறனாய்வுத் தேர்வில் எண்களின் இடமதிப்பு 19.54 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே தெரிகிறது என அனைவருக்கும் கல்வி இயக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி கூறினார்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தாமதமாகக் கற்றல் திறன் உடைய மாணவர்களுக்கான குறைதீர் கற்பித்தல் குறித்த ஒருநாள் பயிற்சி வட்டார வளமையத்திற்குட்பட்ட 11 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. நரையன்குளம் ஒத்தப்பட்டி குறுவளமையத்தில் பயிற்சியை தொடங்கி வைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி கருத்துரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

அனைவருக்கும் கல்வி இயக்கத்தால் நடத்தப்பட்ட மாநில அளவிலான மூன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்புக்கான திறனாய்வுத் தேர்வில் தேர்வில் (SLAS report 2014) தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதப் பாடங்களில் தாமதமாகக் கற்கும் மாணவர்கள் பல திறன்களில் குறைவான அடைவே பெற்றுள்ளனர்.

குறிப்பாக கணிதத்தில் எண்களை அறிதல் (34.73%), வடிவங்களை அறிதல் (18.4%), எண்களின் இடமதிப்பு (19.54%), கழித்தல் (40.5), வகுத்தல் (30.4%), மடங்குகளை அறிதல் (35.97%), சமச்சீர்தன்மையை அறிதல் (35.97%) ஆகிய கணிதத் திறன்களில் குறைவான அடைவை தொடக்க நிலை மாணவர்கள் பெற்றுள்ளார்கள்.

தாமதமாகக் கற்றல் திறனுடைய மாணவர்களுக்கு கணிதத்தின்மேல் உள்ள அச்சத்தைப் போக்கவும், ஆர்வத்தை ஏற்படுத்தவும், எளிமையாகக் கற்பிக்கும் வகையிலும் அவர்களின் முன்னேற்றத்தை முழுமையாக கருத்தில் கொண்டும் இப் பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகிறது.

எல்லோருக்கும் கல்வி, தரமான கல்வி என்பது இன்றைய தமிழகக் கல்வித் துறையின் சூளுரையாகும். அனைத்து நிலையில் உள்ள மாணவர்களின் கற்றல் மகிழ்ச்சியுடன் அமைய வேண்டும் என்றார் அவர். பயிற்சியின் கருத்தாளர்களாக எம்.வேணி, வி.மருதக்காளை, த.கணேஷ்வரி, எஸ்.மாரியப்பன், ஜி.தர்மர், எம்.கனகலட்சுமி, ஏ.ஜூடு அமலன், எம்.மீனலோஷினி, பி.கற்பகம், எஸ்.முத்துலட்சுமி, எஸ்.சுந்தரேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அதிகாரி அ.புகழேந்தி உத்தரவின்படி, உதவி திட்ட அலுவலர் கே.நல்லதம்பி செய்திருந்தார். 11 மையங்களில் நடைபெற்ற இப் பயிற்சியில் 459 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.