அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மின்னணு பறக்கும் தானியங்கி தபால் பட்டுவாட ஊர்தி: கலசலிங்கம் மாணவர்கள் வடிவமைப்பு

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் பா.சரவணக்குமார், அ.ஜாஸிந்த் எம்ரில், ச.கார்த்திகா ஆகியோர் தானாகவே சென்று பொருள்களைச் சரியான

News image
Updated On :7 டிசம்பர் 2015, 5:43 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் பா.சரவணக்குமார், அ.ஜாஸிந்த் எம்ரில், ச.கார்த்திகா ஆகியோர் தானாகவே சென்று பொருள்களைச் சரியான இடத்தில் வழங்ககக் கூடிய ட்ரோன் என்ற ஊர்தியை ஐ.பி.எஸ். மூலம் இயங்கும், லேப்வியூ என்ற தொழில் நுட்பத்தின் துணையோடு, துறைத் தலைவர் பள்ளிகொண்ட ராஜசேகர், பேராசிரியை கே.எஸ்.தனலட்சுமி ஆகியோரின் ஆலோசனையின்படி வடிவமைத்துள்ளனர்.

ட்ரோன் குவாட்காப்டர் என மாணவர்களால் பெயரிட்டு அழைக்கப்படும் இந்த மின்னணு ஊர்தி 2.3 கி.கி. எடையுள்ள பொருள்களைத் தூக்கும் திறன் கொண்டது. இது எடையை தூக்கிச் செல்லும் வகையில் எடைத் தூக்கும் பெட்டியும் (பார்கோடு) மூலம் பொருள்களை வழங்குபவர்களின் சரியான விலாசம், இடம் குறித்த தகவல்களையும் கொண்டுள்ளது.இதன் கூட்டு அசெம்பிளி 3 பகுதிகளை உள்ளடக்கியது.

 முதலாவதாக இந்த ட்ரோன் வடிவமைக்க வேண்டும். இரண்டாவது இந்த ட்ரோனில் ஐ.பி.எஸ். பொருத்த வேண்டும். மூன்றாவது ட்ரோனைக் கண்காணிக்க லேப்வியூ என்ற தொழில்நுட்பத்துடன் ஆண்ட்ராய்டு பயன்பாட்டுடனும் இணைக்க வேண்டும்.சாக்லேட் ஏற்றுமதிக்கும், கால்நடை தடுப்பூசிகளை ஏற்றிச்சென்று அருகிலுள்ள பகுதிகளுக்கு கொடுக்கவும் இந்த ட்ரோனை பயன்படுத்தலாம்.

மாணவர்கள் இதை மேலும் மேம்பட்டதாகச் செய்ய, செல்லும் வழியில் ஏதாவது இடையூறு இருந்தால் அதற்கேற்றவாறு தன்னுடைய நிலையை X, Y, Z என்ற கோணங்களில் தானாகவே மாற்றிக் கொள்ளும்படி செய்யப்போவதாகவும், இந்த பயன்பாட்டின் மூலமாக எந்த பொருளையும், எந்த இடத்திலும் குறைந்த காலத்தில் மனித ஆற்றலின்றி சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கலாம் என்றார் மாணவர் சரவணக்குமார்.இந்ததத் திட்டம் டெல்லியில் உள்ள அகில இநதிய சுயதொழில் முனைவுத் திறன் கண்டுபிடிப்பு என்ற அமைப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி கிடைத்துள்ளது என்று துறைத் தலைவர் பள்ளிகொண்ட ராஜசேகரன் கூறினார்.

மேலும் இந்த மாணவர்களுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இளம் விஞ்ஞானி பட்டமும் ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தமிழ்நாடு அறிவியல் வளர்ச்சி நிதிக்கும், புதுதில்லி காப்புரிமைக் கழகத்திற்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்று பேராசிரியை தனலட்சுமி கூறினார்.

இந்த புதிய வடிவமைப்பை உருவாக்கியுள்ள மாணவர்களையும் துறைத் தலைவரையும், பல்கலைக்கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன், இயக்குநர் டாக்டர் எஸ்.சசிஆனந்த், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன், பல்கலைக்கழகத்தின் சுயதொழில் வளர்ச்சி இயக்குநர் டாக்டர் எம்.ஜெயக்குமரன் ஆகியோர் திங்கள்கிழமை பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.