மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

மன்னார்குடி-ஜோத்பூர் விரைவு ரயிலுக்கு பாஜகவினர் வரவேற்பு

மயிலாடுதுறைக்கு வந்தடைந்த மன்னார்குடி-ஜோத்பூர் வாராந்திர  விரைவு ரயிலுக்கு பாஜகவினர் வரவேற்பளித்தனர்.

Published On :

மயிலாடுதுறைக்கு வந்தடைந்த மன்னார்குடி-ஜோத்பூர் வாராந்திர  விரைவு ரயிலுக்கு பாஜகவினர் வரவேற்பளித்தனர்.

கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி-ஜோத்பூர் விரைவு  ரயிலின் சேவை துவக்க விழா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மன்னார்குடியில் திங்கள்கிழமை பிற்பகல் 6-மணிக்கு புறப்பட்ட அந்த ரயில் இரவு 8-மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.

ரயில் நிலையத்தில் திரண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியினர் அந்த ரயிலுக்கு வரவேற்பளித்தனர்.மேலும் ரயிலை இயக்கி வந்த ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினர்  வழக்குரைஞர் கே.ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்தப்பேட்டியில் கூறியது:   

காவரி டெல்டாவையும்-ராஜஸ்தான் மாநிலத்தையும் இணைக்கும் வகையில்  ரயில் சேவையை துவக்கியுள்ள மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை அமைச்சகத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.வாரம் ஒரு முறை இயக்கப்படவுள்ள இந்த ரயிலை 2 முறை இயக்கவும்,51 மணி நேரப் பயண ரயில் சேவையை 45 மணி நேரமாகக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சிகளில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், மாவட்டப்பொதுச்செயலாளர் நாஞ்சில்.பாலு,மாவட்டப் பொருளாளர் முத்துக்குமாரசாமி,ஒன்றிய நிர்வாகிகள் ஷீதர்,குணசேகரன்,நகரத் தலைவர் செந்தில், மயிலாடுதுறை ஜெயின் சங்கத் தலைவர் கைலாஷ்சந்த் ஜெயின் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.