காரைக்கால் பகுதி கடலில் சனிக்கிழமை குளிக்கச் சென்றபோது மாயமான பள்ளி மாணவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது.
காரைக்கால் வடமட்டம் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சிவராஜ் (16). இவர் கோட்டுச்சேரியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார். இவரது நண்பர்கள் கோட்டுச்சேரி மேடு பகுதியை சேர்ந்த ராகுல், கீழகாசாக்குடிமேடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார், திருப்பட்டினத்தை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய நால்வரும், பள்ளி விடுமுறையையொட்டி சனிக்கிழமை காரைக்கால் பகுதியில் உள்ள கோட்டுóச்சேரிமேடு கடற்கரைக்கு சென்று கடலில் இறங்கி குளித்தனர்.
திடீரென ராகுல், சிவராஜ் ஆகிய இருவரும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்து மீனவர்கள் விரைந்து சென்று வலைகளை வீசி தேடினர். அப்போது வலையினுள் ராகுல் சிக்கிக்கொண்டார். அவரை அப்பகுதியில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக அவர் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
அலையில் சிக்கிக்கொண்ட சிவராஜ் இரவு வரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவரது சடலம் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. கோட்டுச்சேரி காவல்நிலைய போலீஸôர் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் வாகன காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்

ரூ.950 கோடி சம்பளம் வாங்கிய ஹாலிவுட் நடிகர்..! மார்வெல் திரைப்படங்களிலே அதிகம்!

மும்பையில் பல கோடி மதிப்பில் வீடு கட்டிய பூஜா ஹெக்டே!

ஒரே இடத்தில் இவ்வளவு அசிங்கத்தைப் பார்த்ததில்லை: மாணவர்களை விமர்சித்த கங்கனா!
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


