பழனியில் சுற்றுலா வாகன நிறுத்தத்துக்கு கட்டண வசூல் ஏலம் ரூ.3.25 கோடிக்கு போனது
பழனி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை பல்வேறு இடங்களில் உள்ள குளியறை, கழிப்பிடம், தினசரி சந்தையில் கட்டணம் வசூலித்தல், வாகனங்கள் நிறுத்தக்கட்டணம் என 11 இனங்களுக்கான ஏலம்


பழனி நகராட்சி சார்பில் பழனி கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டண வசூல் ஏலம் ரூ.3.25 கோடிக்கு போனது.
பழனி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை பல்வேறு இடங்களில் உள்ள குளியறை, கழிப்பிடம், தினசரி சந்தையில் கட்டணம் வசூலித்தல், வாகனங்கள் நிறுத்தக்கட்டணம் என 11 இனங்களுக்கான ஏலம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் பழனியாண்டவர் ஹாலில் நடைபெற்ற இந்த ஏல நிகழ்ச்சிக்கு ஆணையர் முஜிபுர் ரகுமான் தலைமை வகித்தார். மேலாளர் பாஸ்கரன், வருவாய் அலுவலர் வெங்கடேசன், சங்கர் உள்ளிட்ட பலர் ஏல நிகழ்ச்சியை நடத்தினர். இந்த ஏலம் பொதுஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி முறையில் நடைபெற்றது. ஏலம் முடிந்த பின்னர் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டது. நகராட்சி தினசரி சந்தையில் உள்ள கட்டண கழிப்பிடம், அருள்ஜோதி வீதியில் உள்ள கட்டணக்கழிப்பிடம், நகராட்சி பேருந்து நிலையத்தில் எடை இயந்திரம் வைத்தல் ஆகியன ஏலம் போகவில்லை.
காந்தி மார்க்கெட் தினசரி சந்தையிலும், கடைகளிலும் கட்டணம் வசூல் செய்யும் உரிமத்தில் யாரும் ஏலம் கோராத நிலையில் ரூ.32.90 இலட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. ஆனால் நகராட்சி நிர்வாகம் ரூ.34.25 இலட்சம் நிர்ணயித்த நிலையில் ஒப்பந்தப்புள்ளி அதற்கும் குறைவாக கோரப்பட்டிருந்ததால் முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் விலைவாசி மாற்றத்தைத் தொடர்ந்து குளியலறை, கழிப்பறை மற்றும் சுற்றுலா வாகன கட்டணவசூல் உள்ளிட்டவற்றிற்கு நகராட்சி நிர்வாகம் கட்டணத்தை உயர்த்தி அளித்திருந்ததால் ஏலத்தில் பிற இனங்கள் அனைத்தும் அதிகமான தொகைக்கு ஏலம் போனது. நகராட்சி ஆண்டவர் பூங்கா ரோட்டில் உள்ள குளியறை மற்றும் கழிப்பறையை ரூ.10 இலட்சத்து 51 ஆயிரத்து 200க்கு வில்வாதம்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரும், இட்டேரி ரோட்டில் உள்ள கட்டணக்கழிப்பறை மற்றும் குளியலறையை ரூ.20 இலட்சத்து 52 ஆயிரத்துக்கு பழனியை சேர்ந்த சாமிராஜ் என்பவரும் ஏலம் எடுத்திருந்தனர்.
அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலா வாகனங்கள் நிறுத்தத்துக்கான கட்டணம் வசூலிக்கும் உரிமத்துக்கான ஏலம் ரூ.3 கோடியே 25 இலட்சத்துக்கு போனது. இதை பழனி பாட்டாளி தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் எடுத்தார். நகராட்சி பேருந்து நிலையத்தில் உட்புறம் மற்றும் வெளிப்புற சுவர் விளம்பர ஏலம் உடுமலையை சேர்ந்த நாகலிங்கபிரவு என்பவரால் ரூ.4 இலட்சத்து 19 ஆயிரத்துக்கு போனது. நகராட்சி ஆண்டவன் பூங்கா ரோடு ஏகேஎம்ஜி எதிரே உள்ள கட்டணக்கழிப்பிடம் ரூ.2 இலட்சத்து 82 ஆயிரத்துக்கு பழனியை சேர்ந்த கருப்புச்சாமி என்பவரும், பாளையம் கட்டண கழிப்பறையில் கட்டணம் வசூலிக்கும் ஏலத்தை திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா என்பவர் ரூ.3 இலட்சத்து 55 ஆயிரத்துக்கும் எடுத்தனர். நகராட்சிக்கு பாத்தியப்பட்ட மரங்களின் மேல்பலன் அனுபவித்துக்கொள்ளும் ஏலம் ரூ.28 ஆயிரத்துக்கு தாஜூதீன் என்பவரால் எடுக்கப்பட்டது.
ஏல நிகழ்ச்சியின் போது அசம்பாவிதங்கள் நிகழாவண்ணம் பழனி டிஎஸ்பி., தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...