/

ஜெயலலிதா பிறந்தநாளுக்காக தங்கத்தேர் புறப்பாடு

பழனியில் மலைக்கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட விவசாய அணி சார்பில் மலைக்கோயிலில் தங்கத்தேர் இழுத்து பிரார்த்தனை செய்யப்பட்டது.

News image
Updated On :23 பிப்ரவரி 2015, 3:11 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் மலைக்கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட விவசாய அணி சார்பில் மலைக்கோயிலில் தங்கத்தேர் இழுத்து பிரார்த்தனை செய்யப்பட்டது.

பழனியில் மலைக்கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட விவசாய அணி சார்பில் பழனி மலைக்கோயிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடத்தப்பட்டது.  தொடர்ந்து ஜெயலலிதா பெயரில் அர்ச்சனைகள் செய்யப்பட்டு தங்கத்தேர் புறப்பாட்டு செய்யப்பட்டது.  நிகழ்ச்சிக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். பழனி ஒன்றியகுழு தலைவர் செல்லச்சாமி, தொகுதி செயலாளர் மகுடீஸ்வரன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், தாராபுரம் பெரியசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் தங்கத்தேர் புறப்பாட்டில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.