மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் ஏதும் இல்லை : முகுல் வாஸ்னிக்

காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் ஏதும் இல்லை, அனைத்து தரப்பினரும் ஒற்றுமையோடு செயல்பட்டு வருகிறோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் கூறியுள்ளார்.

News image
Updated On :25 பிப்ரவரி 2015, 6:30 am

காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் ஏதும் இல்லை, அனைத்து தரப்பினரும் ஒற்றுமையோடு செயல்பட்டு வருகிறோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர் சின்னா ரெட்டி ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகளைச் சந்தித்து கட்சியின் வளர்ச்சி, சீரமைப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, இன்று திருச்சி வந்துள்ள முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ராகுல் காந்தி முக்கியத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை கேட்டு வரும் நிலையில், தமிழகத்தில், வட்டார, மாவட்ட அளவிலான நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையும், கருத்துகளையும் கேட்டு வருமாறு சோனியா காந்தி எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் காங்கிரஸ் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இன்று திருச்சியிலும், நாளை திருவண்ணாமலையிலும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுக்க நடத்தப்படும் ஆலோசனையின் இறுதி அறிக்கையை வரும் 28ம் தேதி சோனியாவை சந்தித்து கொடுக்க இருக்கிறோம்.

இதில், வெறும் எம்பி, எம்எல்ஏ தேர்தல்களில் மட்டும் காங்கிரஸ் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, உள்ளாட்சி தேர்தில்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பரவலாக கருத்துத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவும் சோனியாவிடம் பேசுவோம்.

காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதலோ, குழப்பமோ எதுவும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.