/

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட ஆண் சிசு

பழனியில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டு இறந்து கிடந்த ஆண் சிசுவால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :27 பிப்ரவரி 2015, 12:49 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டு இறந்து கிடந்த ஆண் சிசுவால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி ராஜேந்திரா சாலையில் தனியார் மருத்துவமனை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கான குப்பைத்தொட்டி உள்ளது.  இதில் உள்ள குப்பைகளை நகராட்சி நிர்வாகம் தினமும் லாரி மூலம் உடனடியாக அப்புறப்படுத்துவது வழக்கம்.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை குப்பைகளை அள்ள வந்த போது குப்பைத்தொட்டியில் இறந்த நிலையில் பச்சிளம் சிசு இருப்பதை பார்த்து பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரப்பட்டது.  சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.  இறந்த சிசு பிறந்து சிலமணி நேரங்களை ஆன ஆண் சிசு என்றும், குப்பைத் தொட்டியில் வீசியதால் அதன் உடலுறுப்புக்களை நெருநாய்கள் கடித்திருப்பதும் பலருக்கும் வேதனையை அளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.