6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாளையங்கோட்டை அருகே தாமிரவருணியில் மூழ்கி சிறுவன் சாவு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை தாமிரவருணியில் மூழ்கி சிறுவன் இறந்தான்.

News image
Updated On :2 ஜனவரி 2015, 4:34 pm

முத்துகுமார்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை தாமிரவருணியில் மூழ்கி சிறுவன் இறந்தான்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் காளிராஜ். இவரது மனைவி லட்சுமி சுவேதா. இத் தம்பதிக்கு குமார் (4) என்ற மகன் உள்ளார். இவன், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். இந்நிலையில் குடும்பத்தினருடன் மணக்காடு பகுதியில் உள்ள தாமிரவருணி நதியில் குமார் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தான். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற குமார் நீரில் மூழ்கி இறந்தான். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.