விருதுநகர் சிவன் கோயில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
விருதுநகர் சீத்தாக்காளி கோயில் தெருவைச் சேர்ந்த செல்வரத்தினத்தின் மனைவி மகேஸ்வரி(52). இவர் வெள்ளிக்கிழமை காலையில் சிவன் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக சென்றாராம். அப்போது, வழிபாடு செய்வதற்கு முன் தெப்பக்குளத்திற்கு சென்ற போது திடீரென கால் வழுக்கி தவறி குளத்திற்குள் மூழ்கினராம். இதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து விரைந்து வந்து மீட்டு பார்த்ததில் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக திருக்கோயில் அலுவலர் ராஜேந்திரன் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து போலீஸாரும் வழக்கு பதிவு செய்து சாவு குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

