விருதுநகரில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தனது தந்தையுடன் சைக்கிளில் சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி சட்டக்கல்லூரி மாணவி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தனின் மகள் நந்தினி. இவர் சட்டக்கல்லூரி மாணவியாவர். தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி தந்தையும், மகளும் சைக்கிளில் சென்று மது பழக்கத்தால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சைக்கிளில் மதுக்கடைகளை மூட வலியுறுத்திய பதாகைகளுடன் விருதுநகருக்கு திங்கள்கிழமை வந்தனர். அதையடுத்து, இப்பகுதியில் கச்சேரி சாலை, பஜார், தந்தி மரத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சைக்கிளில் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.
மேலும், இது குறித்து சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கூறுகையில், விருதுநகர் பகுதியில் திங்கள்கிழமை மது ஒழிப்பு பிரசாரத்தை தொடங்கியுள்ளேன். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் மதுவுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறேன். அதையடுத்து வருகிற 26-ம் தேதி குடியரசு தினவிழா அன்று விருதுநகர் தேசபந்து மைதானத்தி்ல் தனது தந்தையுடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க போவதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

