தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஒகேனக்கல் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் அளிப்பு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் சுமார் 100 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்தது.இந்த விபத்தில் அதில் பயணம் செய்த தருமபுரி மாவட்டம்,

News image
Updated On :21 ஜனவரி 2015, 12:38 pm

ராதாகிருஷ்ணன்

ஒகேனக்கல் வனப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் சுமார் 100 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்தது.இந்த விபத்தில் அதில் பயணம் செய்த தருமபுரி மாவட்டம், அதகபாடியைச் சேர்ந்த காளியப்பன் (54), இவரது மனைவி வெங்கட்டம்மாள் (50), மல்லாபுரம் சகாதேவன் (50), கம்மாளப்பட்டி மாதம்மாள் (50), அவரது பேத்தி சிவசங்கரி (10), தருமபுரியைச் சேர்ந்த மணிவண்ணன் (50), தொப்பூர் அருகே தொம்பரகாம் பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (10) தீயணைப்பு வீரர் சுதாகர் (42), இண்டூர் சுண்ணாம்புப் பாளையம் எம்.துரைசாமி (63) ஆகிய 9 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 44 பேர் காயமடைந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதில் 36 பேர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மற்ற 8 பேர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயடைந்தவர்களுக்கு நிவாரண நிதி தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் புதன்கிழமை காலை மாநில போக்குவரத்துத்துறை வி.செந்தில் பாலாஜி, மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் இரு அமைச்சர்களும் தருமபுரி மருத்துவமனைக்கு நேரில் வந்து அங்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதையடுத்து, காயமடைந்த சிகிச்சைப் பெற்று வரும் 24 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம், சிறு காயமடைந்த 12 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரண நிதியை வழங்கினார். மேலும், உயிரிழந்தவர்களின் 9 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ரூ.3 லட்சத்திற்கான காசோனை வழங்கினர்.

இந்த விபத்தில் உயிரிழந்த தருமபுரி அருகே அதகப்பாடியைச் சேர்ந்த தம்பதி காளியப்பன், வெங்கட்டம்மாள் ஆகியோரின் வீட்டிற்கும், மல்லாபுரம் சகாதேவன் வீட்டிற்கு நேரில் சென்ற இரு அமைச்சர்களும் அவர்களது சடலங்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காலில் விழுந்து தகறிய இளைஞர்: தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நிவாரண நிதியை அளித்த ஆறுதல் கூறிய பின்னர் அமைச்சர்கள் பி.பழனியப்பன், வி.செந்தில்பாலாஜி ஆகியோர் வெளியே வந்தனர். அப்போது, விபத்தில் உயிரிழந்த சுதாகரின் உறவினர் ஒருவர் கதறி அழுதப்படி போக்குவரத்துறை அமைச்சரின் காலில் விழுந்த சுதாகரின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அளிக்க உத்தரவிடும் படி கூறினர். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.