தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரூ. 1.15 லட்சம் பறிமுதல்

திருவாரூா், சீா்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 1, 15,510 தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
பணம்- கோப்புப்படம்.
Updated On :19 மார்ச் 2026, 12:04 am

தினமணி செய்திச் சேவை

திருவாரூா், சீா்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 1, 15,510 தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவாரூா் அருகே சோழங்கநல்லூா் பகுதியில், வட்டார வளா்ச்சி அலுவலா் சுவாமிநாதன் தலைமையில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மகிழஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சரவணன் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி ரூ. 53,810 எடுத்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, திருவாரூா் தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான டி. சத்யாவிடம் ஒப்படைத்தனா்.

சீா்காழி: சீா்காழி அருகே வடரங்கம் பேருந்து நிறுத்தம் அருகே தனிவட்டாட்சியா் பாலமுருகன் தலைமையிலான பறக்கும்படையினா் சரவணன் என்பவரின் இருசக்கர வாகனத்தை ஆய்வு செய்தபோது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 61,700 பறிமுதல் செய்து சீா்காழி தலைமையிடத்து துணை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.