முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கம்பம் தேக்கடி, குமுளி, உள்பட பெரியாறு அணையின் நீர்பாசன பகுதிகளில் சுத்தமாக மழையில்லை. தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14 707 ஏக்கர் நிலத்தில் முதல் போக அறுவடை பணிகள் முடிந்து.
தற்போது கம்பம், கூடலூர், சுருளிபட்டியில் 2–ம் போக நெற்கதிர் பால்பிடிக்கும் பருவத்தில் உள்ளது. அதேநேரத்தில் மார்க்கையன்கோட்டை, உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் நடவு நட்டு 30 நாட்கள் ஆகிறது. இதயைடுத்த பகுதிகளான கோட்டூர், வீரபாண்டி, பழனிசெட்டி பட்டி ஆகிய பகுதிகளில் தற்போது நடவுப்பணிகள் நடந்து வருகின்றன. இந் நிலையில் முல்லை பெரியாறு அணையில் இருந்து தற்போது 900 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
2ம் போக பருவத்திற்கே வரும் மார்ச் மாதம் வரை தண்ணீர் தேவைப்படும் சூழலில் பெரியாறு அணையில் இருந்து 900 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மழை நின்றுவிட்ட இந்த தருணத்தில் தொடர்ந்து 900 கனஅடி நீர் திறந்து விடப்படுவது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் சங்கதலைவர் தர்வேஸ் மைதீன் தலைமையில் செயலாளர் நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுப்பிள்ளை முன்னிலையில் இன்று உத்தம பாளையம் பைபாஸ் சாலையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது, இவர்களிம் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் பால முருகன் மற்றும் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எதிர்க்கட்சித் தலைவர் என்ன ரப்பர் ஸ்டாம்ப்பா? சிபிஐ இயக்குநர் விவகாரத்தில் ராகுல் கடும் அதிருப்தி!

அதானி குழுமப் பங்குகள் சரிவுடன் நிறைவு!
அதிமுக எம்எல்ஏக்கள் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கக் கூடாது: இபிஎஸ் தரப்பு எச்சரிக்கை!

ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள்! டெலிகிராமில் வாங்கிய இளைஞர்!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
