மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு பிரிவினரிடைய மோதல்: 20 பேர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சமுதாயத்தினரிடையே அசாரணமான சூழ்நிலை நிலவுவதால், சட்டம் ஒழுங்கை பேணி அமைதியை காப்பதற்காக

News image
Updated On :31 ஜனவரி 2015, 2:08 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சமுதாயத்தினரிடையே அசாரணமான சூழ்நிலை நிலவுவதால், சட்டம் ஒழுங்கை பேணி அமைதியை காப்பதற்காக போலீஸார் 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அத்திகுளம் வடக்குத் தெருவில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளார்கள். இவர்களுக்கான மயானம், கிழக்கு பக்கம் உள்ள கண்மாய் அருகேயுள்ளது. இந்த சமுதாயத்தினர் இறந்தால், பிரேதத்தை மற்றொரு தரப்பினர் குடியிருக்கும் காலனி பகுதி வழியே கொண்டு செல்வார்கள். இந்த நடைமுறை காலம்காலமாய் இருந்து வருகிறது. சமீப காலமாய் காலனி வழியே  மற்றொரு சமுதாயத்தினரின் பிரேதத்தைக் கொண்டு செல்லக் கூடாது என்று காலனி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக சடலங்களை கொண்டு செல்ல இயலாமல் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் பிரேதத்துடன் போராட்டங்களி்ல் ஈடுபட்டனர். அதிகாரிகள் தற்காலிகமாக சமரசம் செய்து வழக்கம்போல் காலனி வழியே சடலங்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் இப் பகுதியில் அசாதரணமான சூழ்நிலை நிலவுவதாயும், சட்டம் ஒழுங்கை பேணி அமைதியைக் காப்பதற்காகவும் வடக்குத் தெருவைச் சேர்ந்த அ.கிருஷ்ணசாமி (50) மற்றும் 9 பேர் மீதும்,  கீழத் தெருவைச் சேர்ந்த செ.பெருமாள் (55) மற்றும் 9 பேர் மீதும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் கே.சுந்தரபாண்டியன் புகார் செய்தார். போலீஸார் 20 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.