நிச்சயித்த திருமணத்தை மகள் நிறுத்திய வேதனையில் தந்தை தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில், நிச்சயக்கப்பட்ட திருமணத்தை விருப்பம் இல்லை என்று நிறுத்த நடவடிக்கை எடுத்த மகளில் செயலால் வேதனையுற்ற தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


ஸ்ரீவில்லிபுத்தூரில், நிச்சயக்கப்பட்ட திருமணத்தை விருப்பம் இல்லை என்று நிறுத்த நடவடிக்கை எடுத்த மகளில் செயலால் வேதனையுற்ற தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், சீனியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜோ.பவுல் (55). இவரது மகள் விண்ணரசி, செவிலியர் படிப்பு முடித்து வேலை செய்து வருகிறார். இவருக்கும் குளச்சலைத் சேர்ந்த ஒருவருக்கும் 17.6.15-ம் தேதி திருமணம் நிச்சயம் நடைபெற்றுள்ளது. 6.7.15-ம் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளார்கள்.
இந்நிலையில் விண்ணரசி, தங்களது ஆர்.சி. தேவாலய பங்கு தந்தையிடம் சென்று எனக்கு மணமகனைப் பிடிக்கவில்லை என்று கூறி வந்துள்ளார். இந்தத் தகவலை அறிந்து வேதனையுற்ற தந்தை பவுல் புதன்கிழமை விஷம் குடித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...