ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் தேர்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவராக கோமதிசங்கர் ஜி.குருசாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

News image
Updated On :25 ஜூலை 2015, 10:04 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவராக கோமதிசங்கர் ஜி.குருசாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் 28-வது மகா சபைக் கூட்டம், சனிக்கிழமை அதன் தலைவர் கோமதிசங்கர் ஜி.குருசாமி தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் ஆர்.எல்.செல்வராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவராக கோமதிசங்கர் ஜி.குருசாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக இப் பொறுப்பில் இருந்து வருகிறார். ரோட்டரி சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், ரயில்வே பாதுகாப்புக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக மின்சாதன வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ளார். மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவரை அனைத்து கட்சி பிரமுகர்கள், பல்வேறு அரசு உயரதிகாரிகள், வியாபாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சங்கத்தின் பிற நிர்வாகிகள்: செயலாளர் பி.கோபால்ராஜா, பொருளாளர் ஆர்.எல்.செல்வராஜ், துணைத் தலைவர்கள் ஜி.கார்த்திக், வி.சி.வன்னியராஜ், துணைச் செயலாளர்கள் எஸ்.ராமசுப்பு, கே.சி.பி.சி.ராஜேஸ்கனி, ஆலோசகர்கள் ஆர்.ஞானம், என்.சமரசம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.