ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மணல் திருட்டு: மூன்று டிராக்டர்கள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று டிராக்டர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :26 ஜூலை 2015, 12:53 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று டிராக்டர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் சார்பு ஆய்வாளர் வீரணன், திருவண்ணாமலை-நரிப்பாறை பகுதியில் போலீஸாருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போலீஸாரை பார்த்த உடன் டிராக்டரை நிறுத்திவிட்டு இருவர் தப்பி ஓடிவிட்டார்கள். டிராக்டரை சோதனையிட்ட போது அதில் அரசு அனுமதியின்றி மண் திருடி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார், வழக்குப் பதிவு இது தொடர்பாக மங்காபுரம் கீழ்பக்கம் தெற்குத் தெருவைச் சேர்ந்த அம்மாசிக்கனி மகன் ஜெயபெருமாள், மங்காபுரம் மகாலிங்கம் மகன் திலகராஜ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

வத்திராயிருப்பு: தாணிப்பாறை-மகாராஜபுரம் சாலையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒன்றன் பின் ஒன்றாக இரு டிராக்டர்கள் வந்து கொண்டிருந்துள்ளது. போலீஸாரைப் பார்த்தவுடன் டிராக்டர்களை நிறுத்திவிட்டு அதிலிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டார்கள். டிராக்டர்களைச் சோதனையிட்டதில் அதில் அரசு அனுமதியின்றி மணல் திருடி வந்தது தெரியவந்தது.

இது குறித்து வத்திராயிருப்பு போலீஸார், வத்திராயிருப்பு மேலத் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக், டி.கிருஷ்ணாபுரம் பெரியசாமி மகன் மகாலிங்கம் மற்றும் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள். இரு டிராக்டர்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.