ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரை வடமலையான் மருத்துவமனை இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

News image
Updated On :26 ஜூலை 2015, 11:00 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரை வடமலையான் மருத்துவமனை இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

முகாமிற்கு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் கோமதிசங்கர் ஜி.குருசாமி தலைமை தாங்கினார். செயலாளர் பி.கோபால்ராஜா முன்னிலை வகித்தார். பொருளாளர் ஆர்.எல்.செல்வராஜ் வரவேற்றார்.

முகாமை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி மற்றும் ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளி தாளாளர் டி.ஏ.எஸ்.ராமஸ்வாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினர்.

முகாமில் இருத சிறப்பு மருத்துவ நிபுரணர்களின் ஆலோசனை, மகளிர் மற்றும் பொது மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்டவை கண்டறியப்பட்டது. மேலும் தேவைப்பட்டோருக்கு இ.சி.ஸி., எக்கோ எடுக்கப்பட்டது. மேலும் உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

வடமலையான் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் முகாமில் சுமார் 600 பேரை பரிசோதித்து சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் கோமதிசங்கள் ஜி.குருசாமி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.