ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கோழியை காணாததால் ஏற்பட்ட தகாறில் ஒருவரை வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை

கோழியைக் காணாததால் ஏற்பட்ட தகாறில் அரிவாளால் வெட்டியவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம்

News image
Updated On :31 ஜூலை 2015, 5:18 pm

கோ.ஜெயக்குமார்

கோழியைக் காணாததால் ஏற்பட்ட தகாறில் அரிவாளால் வெட்டியவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கியது.

கூமாப்பட்டி, பிளவக்கல் அணையைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி தேவர் மகன் தெய்வேந்திரன் (32). இவர் வீட்டில் இருந்தபோது 15.1.2013-ம் தேதி, அங்கு அருகில் உள்ள பட்டுப்பூச்சி என்ற இடத்தைச் சேர்ந்த ராமர் மகன் சீனி என்பவர் கையில் அரிவாளுடன் வந்து, தெய்வேந்திரனிடம் என் கோழியைப் பார்த்தாயா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் எங்கள் கோழிதான் உங்கள் வீட்டில் உள்ளது என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமுற்ற சீனி, தெய்வேந்திரனை வெட்ட முற்பட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த இவரது தம்பி தர்மர் தடுக்கவே, இவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இது குறித்து தெய்வேந்திரன் கூமாப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சீனியைக் கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், சீனிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.