அண்ணாமலைப் பல்கலையில் ஜூன் 5-ல், 351 நூல்களை வெளியிடும் கின்னஸ் சாதனை விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறை, மலாயப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை, சென்னை கலைஞன் பதிப்பகம் ஆகியவை இணைந்து 351 தமிழறிஞர்களால்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறை, மலாயப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை, சென்னை கலைஞன் பதிப்பகம் ஆகியவை இணைந்து 351 தமிழறிஞர்களால் எழுதப்பெற்று ஒரே நாளில் 351 நூல்களை வெளியிடும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ஜூன் 5-ம் தேதி நடைபெறுகிறது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறை, மலாயப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை, வைரவிழா காணும் சென்னை கலைஞன் பதிப்பகம் ஆகியவை இணைந்து பன்னாட்டு கருத்தரங்கை ஜூன் 5,6 தேதிகளில் நடத்துகிறது. இக்கருத்தரங்கில் மறைந்த-வாழும் தமிழறிஞர்களின் வாழ்வும், பணியும் 351 தமிழறிஞர்களால் எழுதப்பெற்று ஒரே நாளில் 351 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நடைபெறும் தொடக்க விழாவிற்கு தமிழியல்துறை தலைவர் முனைவர் அரங்க,பாரி வரவேற்கிறார். பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் செ.மணியன் தலைமை வகித்து நூலினை வெளியிடுகிறார். கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், அண்ணாமலைப் பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் முனைவர் மூ.ராசாராம் நூலினை பெற்று விழா பேரூரையாற்றுகிறார். மலேசியா உலகத் தமிழாராய்ச்சி தலைவர் டான்ஸ்ரீ த.மாரிமுத்து, மலாயாப் பல்கலைக்கழகம் இந்திய ஆய்வியல்துறை தலைவர் ஆர்.மோகன்தாஸ், சென்னை பல்கலைக்கழக தமிழ இணைப் பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன் ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர். உதவிப் பேராசிரியர் ப.சு.மூவேந்தன் நன்றி கூறுகிறார்.
பல்கலைக்கழக டெக்பார்க்கில் ஜூன் 6-ல் நடைபெறும் கருத்தரங்கு நிறைவு விழாவிற்கு பதிவாளர் ஜே.வசந்தகுமார் தலைமை வகிக்கிறார். மலாயாப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் எஸ்.குமரன், சென்னை கலைஞன் பதிப்பகம் நந்தன் மாசிலாமணி, சென்ஏனை எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கல்லூரி புல முதல்வர் முனைவர் அபிதா சபாபதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழகஅரசு வேளாண்துறை ஆணையர் முனைவர் எம்.ராஜேந்திரன் சான்றிதழ் வழங்கி வாழ்த்துரையாற்றுகிறார். சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் முனைவர் பு.பிரகாசம் நிறைவு விழா பேரூரையாற்றுகிறார். உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.ராஜா நன்றி கூறுகிறார். பன்னாட்டு கருத்தரங்கு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முனைவர் அரங்க.பாரி, இணை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ப.சு,மூவேந்தன், முனைவர் ஜா.ராஜா ஆகியோர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...