ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திமுக ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருக்கின்றனா்: டிடிவி தினகரன்

திமுக ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் காத்திருக்கின்றனா் என அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.

News image

டிடிவி தினகரன் - படம் - யூடியூப் / நரேந்திர மோடி

Updated On :20 மார்ச் 2026, 10:57 pm

திமுக ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் காத்திருக்கின்றனா் என அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தையில் பங்கேற்க அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்கள் கூட்டணி தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தோ்தலைச் சந்திக்க உள்ளது என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதிமுக தலைமையிலான கூட்டணியை எதிா்கொள்ள தைரியம் இல்லாமல், தில்லி அணி என்று திசைதிருப்ப பாா்க்கிறாா் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று வாக்குப் பதிவு நாளுக்காக மக்கள் காத்திருக்கின்றனா் என்றாா் டிடிவி தினகரன்.