போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை: தமிழக உழவர் முன்னணி கண்டனம்

ஜூன் 12-ல் மேட்டு அணை திறப்பு இல்லை என முதல்வர் அறிவித்துள்ளதற்கு தமிழக உழவர் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக உழவர் முன்னணி மாநிலத் தலைவர் சி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

News image
Updated On :5 ஜூன் 2015, 1:35 pm

ஜி.சுந்தரராஜன்

ஜூன் 12-ல் மேட்டு அணை திறப்பு இல்லை என முதல்வர் அறிவித்துள்ளதற்கு தமிழக உழவர் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக உழவர் முன்னணி மாநிலத் தலைவர் சி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முதல்வர் காவிரி பாசனத்திற்கு ஜூன் 12-ல் தண்ணீர் திறக்க முடியாது என அறிவித்துள்ளார். கடந்த ஓராண்டின் நிலுவைத் தண்ணீரையும், மே மாதத்திற்குரிய நீரையும் கர்நாடகத்திடமிருந்து கேட்டுப்பெற தவறிய தமிழகஅரசு, தமிழக விவசாயிகளின் பாசனை உரிமையான காவிரி நீரைப் பெற்றுத்தர விரும்பாமலப், பாசன உரிமையை விவசாயிகள் மறக்க வேண்டும் என்ற நிலையில் தமிழக முதல்வரின் அறிவிப்பு உள்ளதை தமிழக உழவர் முன்னணி கண்டிக்கிறது.

மேலும் தொடர் வறட்சி காரணமாககும், அண்டை மாநிலங்களின் நீர் முற்றுகை காரணமாகவும்ஸ 2012-ல் முழுச்சாகுபடியும், 2013-14 குறுவை சாகுபடியும் அழிந்து, சம்பா சாகுபடியும் பாதி மகசூலே கிடைத்தது. அண்மையில் கொட்டி தீர்த்த கோடை மழையால் பருத்தியும், எள்ளும், காய்கறி சாகுபடியும் அழிந்து விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.

அண்டை மாநிலங்களின் நீர் முற்றுகையை தீர்க்க இயலாத மத்திய, மாநில அரசும் விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என அறிக்கையில் சி.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.