தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தாஞ்சாவூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை: பணம், நகை கொள்ளை

தாஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :5 ஜூன் 2015, 5:44 am

பார்திபன்

தாஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிராம்பட்டினம், மேலத்தெருவில் வசிப்பவர் முகமது முஸ்தப்பா (53), சென்னையில் கட்டிட கான்ரெக்ட் தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி ரம்ஜான்தேவி (48).

கடந்த 28-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவியின் கண் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றார் முகமது. ஜூன் 3-ம் தேதி இரவு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் நகைகள், ரூ.47 ஆயிரம் ரொக்கம், லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

உறவினர்கள் கொடுத்த தகவலின் படி, இன்று காலை வீட்டிற்கு வந்த முகமது அதிர்ச்சியடைந்தார். அதன்பின்பு அவர் வீட்டில் காணாமல் போன பொருள்கள் குறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.