டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாயப்பட்டறையால் சுகாதார சீர்கேடு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறையின் கழிவுகளால் இப் பகுதி பெருமளவு மாசடைந்து பொதுமக்கள் இன்னல் அடைந்து வருவதாயும், மாசுக்கட்டுப்பாட்டு

News image
Updated On :10 ஜூன் 2015, 12:21 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறையின் கழிவுகளால் இப் பகுதி பெருமளவு மாசடைந்து பொதுமக்கள் இன்னல் அடைந்து வருவதாயும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, திருவண்ணாமலை ஊராட்சி, ஆண்டாள்புரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இப் பகுதியில் சந்தானலட்சுமி என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் பி.பழனிச்சாமி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக சாயப்பட்டறை நடத்தி வருகிறார். குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்த சாயப்பட்டறையில், நூலுக்கு சாயமிடுதல், நூலை வேகவைத்து உலர வைத்தல் போன்ற பணிகள் தினமும் நடைபெற்று வருகிறது. நூலை உலர வைக்கும்போது அதில் கலந்துள்ள வேதிப் பொருளில் இருந்து வரும் துர்நாற்றத்தால் இப் பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் அருகில் ஊராட்சி சார்பில் குடிநீர் தொட்டி உள்ளது. சாயப்பட்டறை கழிவுகள் நேரிடையாக தரையிலும், கழிவு நீர் பாதையிலும் விடப்படுவதால், இந்த குடிநீர் தொட்டியிலுள்ள நீர் மாசடைந்து பல்வேறு நோய்த் தொற்றுகளால் இப் பகுதி மக்கள் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். இந்த இடத்தில் உயிர்களுக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கக் கூடிய மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய வேதிப் பொருட்களைக் கொண்டு பட்டாசுத் தொழிலுக்கான கரிமருந்து திரியும் தயாரிக்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் இந்த இடத்தைப் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த சாயப்பட்டறையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.