முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டதை செயல்படுத்த வலியுறுத்தி முன்னாள் ராணுவத்தினர் பேரணி

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர்.

News image
Updated On :14 ஜூன் 2015, 11:04 am

கோ.ஜெயக்குமார்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர்.

முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, திட்டத்திற்கு பல கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. திட்டத்தை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் அலுவலகம் முன்பு பேரணியை மாவட்ட தலைவர் சுபேதார் மேஜர் எஸ்.கே.சீனிவாசன் தலைமையில் துணைத் தலைவர் சண்முகம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து மீண்டும் சங்க அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிச் சென்றன். பேரணியில் ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், வத்திராயிருப்பு, பெருமாள்தேவன்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.