பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

விருதுநகரில் மாணவியை கேலி செய்தோரை தட்டிக் கேட்ட தாய்க்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது

விருதுநகரில் மாணவியை கேலி செய்தவர்களை தட்டிக் கேட்ட தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக இளைஞர்கள் 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :14 ஜூன் 2015, 1:40 pm

விருதுநகரில் மாணவியை கேலி செய்தவர்களை தட்டிக் கேட்ட தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக இளைஞர்கள் 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

விருதுநகரில் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி(35). இவரது மகள் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை அதே பகுதியில் உள்ள   நக்கீரர் தெருவைச் சேர்ந்த சின்னராஜ்(25), அசோக்குமார்(23) ஆகியோர் மாணவி சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் போது கேலி செய்வார்களாம். இது தொடர்பாக மாணவி பெற்றோர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து இளைஞர்களின் வீட்டில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மகேஸ்வரியும், அவரது மகளும் பஜார் கடைத் தெருவிற்கு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு பொருள்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார்களாம். அப்போது, அங்கு வந்த மேற்குறிப்பிட்ட இருவரும் மாணவியை கேலி செய்து வாகனத்தில் இருந்தபடியே பிடித்து இழுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து மாணவியின் தாயார் உதவிக்கு ஆள்களை அழைத்து விட்டு இளைஞர்களை தட்டிக் கேட்டாராம். அப்போது, ஆள்கள் வருவதை அறிந்த இருவரும் சேர்ந்து தகாத வார்த்தைகள் பேசியதோடு கொலை செய்து விடுவதாகவும் கூறி மிரட்டிவிட்டு தப்பியோடினார்களாம்.

இது தொடர்பாக மாணவியின் தாயார் மகேஸ்வரி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சின்னராஜ், அசோக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து நடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.