முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் 40 ஆண்டுகளாக இலவசமாக யோகாசனம் கற்றுத் தரும் 107 வயது முதியவர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 107 வயது பூர்தியான முதியவர் குருசாமி கடந்த 40 ஆண்டுகளாக இலவசமாக யோகாசனம் கற்றுத் தருகிறார்.

News image
Updated On :21 ஜூன் 2015, 5:37 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 107 வயது பூர்தியான முதியவர் குருசாமி கடந்த 40 ஆண்டுகளாக இலவசமாக யோகாசனம் கற்றுத் தருகிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஊரணிபட்டித் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (107). இவர் கடந்த 40 ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரேயுள்ள ம.பொன்னையா செட்டியார் யோகாசன நிலையத்தில் இலவசமாக யோகாசனம் கற்றுத் தருகிறார். கடந்த ஒரு மாதமாக வயது முதிர்வின் காரணமாக யோகாசனம் கற்றுத்தர செல்லவில்லை என்கிறார்

இது குறித்து அவர் தினமணி செய்தியாளரிடம் சனிக்கிழமை கூறியதாவது: நெசவுத் தொழிலாளியான எனக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கீழப்பட்டித் தெருவைச் சேர்ந்த கோபால் என்பவர் யோகாசனம் கற்றுத் தந்தார். எனது மனைவி இறந்துவிட்டார். எனக்கு 3 பெண் குழந்தைகளும் இரு மகன்களும் உண்டு. தற்போது ஞானமணி என்ற மகனின் பராமரிப்பில் இருந்து வருகிறேன்.

யோகாசனத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆசனங்கள் உண்டு. இதனைக் கற்றுத் தர ஆட்கள் இல்லாமல் தற்போது இவற்றில் பல மறைந்துவிட்டது. காலையில் யோகாசனம் செய்வது நல்லது. குறிப்பாக பெண்கள் மற்றும் வளர் இளம் பருவத்தைச் சேர்ந்த பெண்கள் யோகாசனம் செய்வது மிகவும் நல்லது. நான் யாரிடமும் பணம் வாங்கிக் கொண்டு யோகாசனம் கற்றுத் தந்தது கிடையாது. என்னிடம் யோகாசனம் கர்றுக் கொண்டு இன்று பலர் யோகாசன ஆசிரியர்களாக பணம் சம்பாதிக்கிறார்கள்.

மத்திய மாநில அரசாங்கங்கள் யோகாசனத்தை பள்ளிகளில் கற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சமுதாயத்தில் ஒழுக்கம், மனித நேயம் சிறந்து விளங்கும் மாணவர்கள் மனதை ஒரு முகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த இயலும். எனது யோகாசன சேவையைப் பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர், ராம்கோ தொழில் குழுமத் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா உள்ளிட்ட பலர் பரிசு வழங்கியுள்ளார்கள். நான் மருத்துவமனைக்கே சென்றது கிடையாது. எனது பற்கள் இன்று கூட வலுவாக உள்ளது. எல்லாவற்றிற்கும் காரணம் யோகாசனம்தான் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.