முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் 23 பேரிடம் மோசடி செய்த வழக்கு: ஒருவர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் 23 நபர்களிடம் ரூ.4,33,320 மோசடி செய்த புகாரின் பேரில் போலீஸார் திங்கள்கிழமை ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்து

News image
Updated On :22 ஜூன் 2015, 1:19 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் 23 நபர்களிடம் ரூ.4,33,320 மோசடி செய்த புகாரின் பேரில் போலீஸார் திங்கள்கிழமை ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் சன்னதி தெருவில் பாண்டியன்பிள்ளை மகன் மணிகண்டன் உள்ளிட்ட 9 பேர் சேர்ந்து ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். தைலாகுளம் கிராமத்திற்கு தெற்கே, அயன்நாச்சியார்கோவில் ஊராட்சிக்குட்பட்ட இடத்தில் குறிப்பிட்ட நிறுவனம் பிளாட்டுகள் போட்டுள்ளதாக ராஜபாளையம், கூரைபிள்ளையார்கோவில் தெரு கு.சூர்யகுமார் (40) என்பவரிடம் ஆசை வார்த்தை கூறினார்களாம். இதன் பேரில் இவர் மற்றும் 22 பேர் சேர்ந்து 23 பிளாட்டுகளுக்கு மாதம் ரூ.290 வீதம் 46 மாதங்கள் மொத்தம் ரூ.3,06,820 கட்டியுள்ளார்கள். பத்திரப் பதிவிற்காக 23 பேரும் தலா ரூ.5500 வீதம் மொத்தம் ரூ.1,26,500 செலுத்தியுள்ளார்கள். ஆனால் நிறுவனம் பத்திரப் பதிவை காலதாமதம் செய்து வந்துள்ளது. இதனையடுத்து சூர்யகுமார் மற்றும் பிளாட்டிற்கு பணம் செலுத்தியவர்கள் 6.4.15-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி தெருவில் உள்ள குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்குச் சென்று கேட்டுள்ளார்கள். அங்கிருந்த மணிகண்டன், பெண்கள் உள்ளிட்ட மற்றவர்களிடம் ஆபாசமாகப் பேசியதுடன், கூலிப்படை கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.

இது குறித்து சூர்யகுமார் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் புகார் செய்தார். நீதிமனறம், நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதன் பேரில் போலீஸார் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.