முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பண மோசடி வழக்கு: ஸ்ரீவிலி. நீதிமன்றத்தில் விஜயகாந்த் மைத்துனருக்கு பிடி ஆணை

நரசிம்மா படத்தில் உரிமையாளருக்கான பணம் தராத வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராகாததையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின்

News image
Updated On :25 ஜூன் 2015, 2:52 pm

கோ.ஜெயக்குமார்

நரசிம்மா படத்தில் உரிமையாளருக்கான பணம் தராத வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராகாததையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஸூக்கு நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் 2001-ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த நரசிம்மா படத்திற்கு நெல்லை மாவட்ட விநியோக உரிமை பெற்றிருந்தார். இதில் இவருக்கும் தயாரிப்பாளர்கள் விஜயகாந்த்-சுதீஸ் ஆகியோருக்கும் ரூ.55 லட்சத்திற்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி நஷ்டம் ஏற்பட்டால் தயாரிப்பாளர் தர வேண்டும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் ரூ.29 லட்சத்திற்கு மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில் ரூ.26 லட்சம் மாரியம்மாளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப் பணத்தை விஜயகாந்த்-சுதீஸ் ஆகியோரிடம் திரும்பக் கேட்டபோது, அவர்கள் தர மறுத்துவிட்டார்களாம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் மாரியம்மாள், விஜயகாந்த் மற்றும் அவரது மைத்துனர் சுதீஸ் மீது வழக்கு தாக்கல் செய்தார். விஜயகாந்த் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமனறம் விஜகாந்தை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது.

வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு சுதீஷ் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீதிபதி பசும்பொன் சண்முகையாக சுதீஷூக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஜூலை 23-ம் தேதிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இரண்டாவது பிடி ஆணை:

ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத சுதீஷூக்கு 10.4.15-ம் தேதி நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது. இதனையடுத்து 27.5.15-ம் தேதி சுதீஷ் நீதிமன்றத்தில் ஆஜரானார். மீண்டும் 11.6.15-ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு சுதீஷ் ஆஜராகவில்லை. இதனையடுத்து 25.6.15-ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணைக்கும் அவர் ஆஜராகவில்லை. இதனால் இவர் மீது இரண்டாவது பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.