லாரியை வாங்கிக் கொண்டு பண மோசடி: மூவர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரியை வாங்கிக் கொண்டு, மீதி பணத்தைத்தராமல், கேட்டுச் சென்றபோது கொலை மிரட்டல் விடுத்ததாக மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரியை வாங்கிக் கொண்டு, மீதி பணத்தைத்தராமல், கேட்டுச் சென்றபோது கொலை மிரட்டல் விடுத்ததாக மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வைத்தியலிங்கபுரம், தேவர் தெருவைச் சேர்ந்தவர் ச.வெற்றிவேல்முருகன் (24). இவருக்குச் சொந்தமான லாரியை, மதுரை, கொடிக்குளம், யானைமலை கல்குவாரியைச் சேர்ந்த ரா.செல்வம் என்பவர் 24.12.14-ம் தேதி ரூ.1.90 லட்சம் என கிரையம் பேசி, ரூ.20 ஆயிரம் முன்பணம் கொடுத்து லாரியை எடுத்துச் சென்றுள்ளார். மீதிப் பணத்தை 5.1.15-ம் தேதி தருவதாக ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொடுத்துச் சென்றுள்ளார். ஆனால் சொன்னதுபோல் பணம் தரவில்லையாம்.
இதனையடுத்து செல்வத்தை நேரில் சந்தித்து பணத்தைக் கேட்க வெற்றிவேல்முருகன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த செல்வம் மற்றும் அவருடன் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திராநகர் முருகன், இதே இடத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து, வெற்றிவேல் முருகனை ஆபாசமாகப் பேசி, பணத்தைக் கேட்டு வந்தால் கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டினார்களாம். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் வெற்றிவேல் முருகன் புகார் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதன் பேரில் போலீஸார் செல்வம், முருகன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...