விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் அரசு போக்குவரத்து கழக பணியாளர் படுகாயம் அடைந்து சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
விருதுநகர் சத்திரரெட்டியபட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(56). இவர் விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இரவு பணிக்கு செல்வதற்காக சத்திரப்பட்டி சாலையில் நடந்து சென்ற போது எதிரே வந்த கொக்கலாஞ்சேரி ஊராட்சி தலைவர் ரமேஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது.இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சின்னச்சாமி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மகன் சின்னராஜா பாண்டியன்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் ஊராட்சி தலைவர் ரமேஷ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

