தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காவிரியின் குறுக்கே அணை: தடையை மீறி பேரணி சென்ற 1,500 பேர் கைது

காவிரி அணையின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகேதத்துவில் புதிய அணை கட்டுவதைக் கண்டித்து, காவல்துறையின்

News image
Updated On :7 மார்ச் 2015, 7:49 am

ரவி

காவிரி அணையின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகேதத்துவில் புதிய அணை கட்டுவதைக் கண்டித்து, காவல்துறையின் தடையையும் மீறி பேரணியாகச் செல்ல முயன்ற விவசாயிகள் உட்பட 1,500 பேர் தவளகிரி சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகைப் பேரணியை இன்று காலை துவக்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டையில் இருந்து இந்த பேரணிப் புறப்பட்டுள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பேரணியில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த பேரணியில் ஏராளமான உழவர்கள், சுமார் 15 தமிழ் ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர்.

பேரணியை முன்னிட்டு நாமக்கல் எஸ்.பி. செந்தில்குமார், கிருஷ்ணகிரி எஸ்.பி. கண்ணம்மாள் ஆகியோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.