நெல்லை மாவட்டத்தில் திடீர் மழையால் அறுவடை பாதிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை திடீரென பெய்த மழையால் தாமிரவருணி பாசனத்தில் நெல் அறுவடை பாதிக்கப்பட்டதாக


திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை திடீரென பெய்த மழையால் தாமிரவருணி பாசனத்தில் நெல் அறுவடை பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடி அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாமிரவருணி பாசனத்தில் நிகழ் பருவத்தில் 68,640 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. பருவ மழை கூடுதலாக பெய்ததால் இப்பாசனத்தில் முழு அளவில் நெல், வாழை, பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டது.
இம்மாவட்டத்தில் நெல் அறுவடை 65 சதவீதம் முடிவடைந்த நிலையில் தாமதமாக நடவு செய்த ரெங்கசமுத்திரம், முக்கூடல், சுத்தமல்லி, பத்தமடை, வீரவநல்லூர்,
சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், முன்னீர்பள்ளம் உள்ளிட்ட பகுதியில் அறுவடை தாமதமாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் சில இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 6 மி.மீ மழையும், கொடுமுடியாறு அணையில் 15 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இதனிடையே சனிக்கிழமை விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதியில் மழை பெய்ததால் விளை நிலங்களில் அறுவடை இயந்திரத்தை இறக்க முடியாமல் நெல் அறுவடை பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்பட
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்தது.
நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 78.60 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 89.04 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 89.88 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 27.40 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 25 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 24.67 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 29.50 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 40 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடியாகவும் இருந்தது.
தண்ணீர் குறைப்பு: அறுவடை நடைபெற்று வருவதால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளதால் அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் 504.75 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் 410 கனஅடியும், கடனாநதி அணையில் 25 கனஅடியும், வடக்குப் பச்சையாறு அணையில் 40 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 158.10 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 41 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பிற அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...