பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை அருகே கார் மோதி கல்லூரி மாணவர் சாவு

திருநெல்வேலி அருகே வெள்ளிக்கிழமை பேருந்தை முந்தி சென்றபோது, கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற....

News image
Updated On :20 மார்ச் 2015, 12:25 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அருகே வெள்ளிக்கிழமை பேருந்தை முந்தி சென்றபோது, கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் இறந்தார். மற்றொரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

வீரவநல்லூர் அருகேயுள்ள அரிகேசநல்லூர் பாறையடிக் காலனியை சேர்ந்தவர் வீரப்பன் மகன் முத்து(20). பத்தமடையை சேர்ந்தவர் நாகூர் மகன் ஆதம்மரைக்காயர் (20). இருவரும் தாழையூத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகின்றனர்.

நண்பர்களான இருவரும் வெள்ளிக்கிழமை கல்லூரி முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை முத்து ஓட்டினாராம்.

மேலச்செவல் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மாணவர்கள் அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த குவாலிஸ் கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயடமைடந்த முத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

காவல் ஆய்வாளர் ச. சந்திரசேகரன் மற்றும் போலீஸார், விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று காயமடைந்த மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப் பதி்ந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.