பழனியில் திட்ட அலுவலரை தாக்கிய செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
பழனியில் திட்ட அலுவலரை தாக்கிய செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திங்கள்கிழமை மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பழனியில் திட்ட அலுவலரை தாக்கிய செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திங்கள்கிழமை மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் திட்டக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை திட்ட அலுவலர் ஆடலரசி தலைமையில் மாதாந்திர திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்துக்கு செவிலியர் இந்திரா என்பவர் தாமதமாக வந்துள்ளார். இதுகுறித்து கேட்ட திட்ட அலுவலருக்கும் ஆடலரசிக்கும், இந்திராவுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் திட்ட அலுவலர் தாக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பழனி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு மருத்துவர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மருத்துவர் பிரபு தலைமை வகித்தார். பழனி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த சுமார் ஐம்பது மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கருப்புப்பட்டை அணிந்து பங்கேற்றனர்.
மருத்துவ அதிகாரிகயை தாக்கிய இந்திரா மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், துறை ரீதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது மருத்துவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...