பழனி மலைக்கோயில் மெட்டீரியல் ரோப்கார் டவர் விழுந்ததால் விபத்து
பழனி மலைக்கோயில் மெட்டீரியர் ரோப்கார் டவர் அமைந்துள்ள தளத்தில் போல்ட் உடைந்ததால் டவர் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.


பழனி மலைக்கோயில் மெட்டீரியர் ரோப்கார் டவர் அமைந்துள்ள தளத்தில் போல்ட் உடைந்ததால் டவர் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்காக படிவழிப்பாதைக்கு மாற்றாக வின்ச் நிறுவப்பட்டது. வின்ச் நிறுவப்பட்ட பின் பக்தர்களிடம் அதற்கு வரவேற்பு அதிகமாக இருந்ததால் தற்போது மூன்று வழிப்பாதைகளில் வின்ச் இயக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல வின்ச் மூலமாக சுமார் 10 நிமிட காலநேரம் ஏற்பட்ட நிலையில் புதிதாக ரோப்கார் வடிவமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் பக்தர்கள் வெறும் மூன்று நிமிடங்களில் மலை உச்சியை அடைய முடிந்ததால் ரோப்காருக்கும் பக்தர்களிடம் பெரும் வரவேற்பு ஏற்பட்டது.
மலைக்கோயிலில் பக்தர்களுக்காக விற்பனைக்கு வேண்டிய பஞ்சாமிர்தம் வின்ச் மூலமாகவே கொண்டு செல்லப்பட்டது. தவிர மலைக்கோயிலில் அன்னதானத்துக்கும் வேண்டிய மளிகை, வாழை இலை பொருட்களும், கட்டிடப் பணிகளுக்கு வேண்டிய தளவாடப் பொருட்களும் வின்ச் மூலமாகவே கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் நாட்களில் இதுபோன்ற பொருட்களை கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்ட நிலையில் இதற்கு மாற்று ஏற்பாடாக ரோப்கார் நிலையத்துக்கு அருகே கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மெட்டீரியல் ரோப்கார் அமைக்கப்பட்டது. ரோப்கார் பணிகளுக்கு ரூபாய் 34 இலட்சம் ரூபாய், கட்டிட பணிகளுக்கு ரூபாய் 20 இலட்சம் என சுமார் 54 இலட்சம் செலவில் மெட்டீரியர் ரோப்கார் பணிகள் முடிக்கப்பட்டவுடன் இதில் இடையூறின்றி பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்பட்டது. இதில் ஒருமுறை சுமார் இருநூறு கிலோ எடையுள்ள பொருட்கள் கொண்டு செல்ல முடியும்.
இந்த நிலையத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை பஞ்சாமிர்தம் ஏற்றப்பட்டு வந்தது. சுமார் 140 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த மெட்டீரியல் ரோப்காரில் 300 மீட்டர் நீளத்துக்கு இரும்பு வடக்கயிறு இணைக்கப்பட்டிருந்தது. இதற்காக மலைப்பகுதியில் சுமார் 100 மீட்டர் உயரத்தில் 20 அடி உயரத்தில் ஒரு இரும்பு டவர் அமைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த சக்கரங்களில் வடக்கயிறு செல்லும் வகையில் மெட்டீரியல் ரோப்கார் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த ரோப்காரும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை எதிர்பாரா விதமாக விபத்துக்குள்ளானது. மெட்டீரியல் ரோப்கார் டவர் அமைக்கப்பட்டிருந்த தளத்தில் இருந்த போல்ட்டுகள் எதிர்பாராவிதமாக உடைந்ததால் சுமார் 20 அடி உயர டவர் சாய்ந்து மரங்கள் அடர்ந்த பகுதியில் விழுந்தது. இதனால் வடக்கயிறுகளும் அறுந்து விழுந்தது. அப்போது வடக்கயிறில் சென்று கொண்டிருந்த இரு மெட்டீரியல் ரோப்கார் பெட்டிகளும் மலைப்பாதையில் விழுந்தது. இதில் பெட்டியில் இருந்த பஞ்சாமிர்த டின்கள் மட்டும் சிதறின.
விரைவில் மெட்டீரியர் ரோப்கார் டவர் அமைந்துள்ள தளம் புதிதாக கட்டப்பட்டு, டவர் சீரமைக்கப்பட்டு ஒரு வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என திருக்கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...