/

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : வியாபாரிகள் நகரமன்றத் தலைவரிடம் மனு

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரி வியாபாரிகள்

News image
Updated On :26 மார்ச் 2015, 9:20 am

சீனிவாசன்

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்  என்று கோரி வியாபாரிகள் நகரமன்றத் தலைவரிடம் மனு கொடுத்தனர்.

அதில், பண்ருட்டி பேருந்து நிலையத்தின் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வருகிறோம்.

நகராட்சி சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாத வாடகையை தவறாமல் செலுத்தி வருகிறோம். பண்ருட்டி பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ப்ரீ ஆக்ஷன் மூலம் கடைகள் கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த இடத்தில் சிமெண்ட் தரை தளம் அமைத்தும் ஷெட்டை மேற்கு புறமாக மாற்றி அமைக்க வேண்டும். இந்த பணிகள் முடியாததால் வியாபாரம் பாதிக்கப்பட்டுளளது.

உடனடியாக இதனை செய்ய வேண்டும். அங்குள்ள ஆக்ரமிப்புக் கடைகளை அகற்ற வேண்டும். தரைக் கடைகளால் சுகாதார சீர்கேடும், குற்ற நிகழ்வுகளும் அடிக்கடி நடந்து வருகிறது.

பேருந்த நிலையத்தில் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொழில்வர்த்தக சங்கத்தலைவர் டி. சண்முகம் தலைமையில் பொதுச் செயலர் வீரப்பன் முன்னிலையில் நூற்றுக்கணக்கான பேருந்து நிலைய கடை உரிமையாளர்கள் நகரமன்றத் தலைவர் பன்னீர்செல்வத்திடம் மனு அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.