டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பொதுமக்களுக்கான இரு நாள் இலவச டிஜிட்டல் முறை பயிற்சி

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பாரதப் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா உறுதிமொழி திட்டத்தின் கீீழ் பொதுமக்களுக்கு டிஜிட்டல் முறைகளைக் கையாளுவதற்கான பயிற்சிகள் சென்னையில் உள்ள தகவல் மற்றும் தொடர்புக்கழகம் (ஐ.சி.டி.) சார்பில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

News image
Updated On :17 மே 2015, 6:03 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பாரதப் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா உறுதிமொழி திட்டத்தின் கீீழ் பொதுமக்களுக்கு டிஜிட்டல் முறைகளைக் கையாளுவதற்கான பயிற்சிகள் சென்னையில் உள்ள தகவல் மற்றும் தொடர்புக்கழகம் (ஐ.சி.டி.) சார்பில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பாரதப் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா உறுதிமொழி திட்டத்தின் கீழ், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 15 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட இரு பாலருக்கும் முதல் அணியாக 100 பேருக்கு இப் பயிற்சி ஜூன் மாதம் வழங்கப்படவுள்ளது. பயிற்சியில் வங்கி ஏ.டி.எம்., கணினி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தல், மின்சாரம், தொலைபேசி, செல்போன் கட்டணங்களை கணினி மூலம் கட்டுதல் உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

இத்துடன் பல தீர்க்கமான அறிவு துணுக்குகளை கணினி மூலம் அறிவது எப்படி உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படும். இந்த டிஜிட்டல் உபகரணங்களை இயக்குவது குறித்த இரு நாள் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இப் பயிற்சியில் கலந்து கொள்ள இம் மாதம் 27-ம் தேதி (புதன்கிழமை) க்குள் 98429-13053 என்ற செல்போன் எண்ணில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சி நாட்களில் இரு நாட்களும் இலவச பேருந்து வசதி மற்றும் இலவச உணவு வசதி செய்து தரப்படும். பயிற்சிக்கான ஏற்பாடுகளை டீன் அகாடமிக் முனைவர் தேவராஜ் செய்து வருகிறார். பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேந்தர் ஸ்ரீதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.