விருதுநகர் மாவட்ட இந்திய மருத்துவக் கழகம் சார்பில் டாக்டர்களுக்கான தொடர் கல்வி கருத்தரங்கு வெள்ளிக்கிழமை, கழகத்தின் மாவட்டத் தலைவர் டாக்டர் காசிராஜன் தலைமையில் நடைபெற்றது.
ஐ.எம்.ஏ. மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.செல்வராஜன் வரவேற்றார்.
சென்னை, பில்ரோத் சிறப்பு மருத்துவமனையில் சுவாச நோய் பிரிவு சிறப்பு மருத்துவர் பி.ஜெயக்குமார் கருத்துரையாற்றினார். சுவாச நோய் பிரச்சனைகளைத் தீர்க்க வந்துள்ள நவீன மருத்துவ முறைகள், புதிய கண்டு பிடிப்புகள் குறித்த விளக்கினார்.
நிகழ்ச்சியில் டாக்டர்கள் ஜெகதீசன், சந்திரசேகரன், அசோகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.டாக்டர் சண்முகராஜன் நன்றி கூறினார்.