டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் கார் மோதி தந்தை மகன் சாவு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த தந்தை மகன் உயிரிழந்தனர்.

News image
Updated On :25 மே 2015, 6:33 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த தந்தை மகன் உயிரிழந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள செம்பட்டையான்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (53). விவசாயக் கூலி. இவரது மகன் பிரதீப்ராஜ் (22). இவர் தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வந்தார்.

பிரதீப்ராஜ் இரு சக்கர வாகனத்தில் தனது தந்தையை பின்னால் அமர வைத்து கிருஷ்ணன்கோவில்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். எதிரே கார் ஒன்று ராஜபாளையத்திலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. மாவட்ட துப்பாக்கி சுடும் மைதானம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, காரின் பின் பக்க டயர் வெடித்து கார் தாறுமாறாக ஓடி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பிரதீப்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமுற்ற ராமர், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த காங்கேயத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.