எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அச்சிறுப்பாக்கம் அருகே நின்றிருந்த கார் மீது அரசு பேரூந்து மோதியதில் 2 பேர் பலி

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே தொழுபேடு சாலையோரம் காரின் டயர் பஞ்சரை சரி செய்ய நின்றிருந்தபோது சேலம் நோக்கி வந்த அரசு பேரூந்து மோதிய விபத்தில் சம்பவ

News image
Updated On :30 மே 2015, 9:57 am

குமார்

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே தொழுபேடு சாலையோரம் காரின் டயர் பஞ்சரை சரி செய்ய நின்றிருந்தபோது சேலம் நோக்கி வந்த அரசு பேரூந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர்கள் பலியானார்கள். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் அந்தோணி (45). இவரது மனைவி செல்வி (40). இவர்களது மகன் பிரவின்குமார் (13). அந்தோணி தனது குடும்பத்துடன், வேளாங்கண்ணி நகரில் இருந்து சென்னைக்கு காரில் வந்துக் கொண்டிருந்தனர். அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை தொழுபேடு பாலம் வழியாக, கார் வந்தபோது காரின் டயர் பஞ்சர் ஆகியது. அதனால் காரின் டயரை சரி செய்ய எதிர் திசையில் உள்ள பஞ்சர் கடைக்கு, அந்தோணி காரை ஓட்டிச் சென்றார். தொழுபேட்டை சேர்ந்த பஞ்சர் கடைக்காரர் கருணாகரன்(40) டயரை சரி செய்ய முயன்றார். அப்போது அவரருகே காரின் உரிமையாளர் அந்தோணி நின்றுக் கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு விரைவு பேரூந்து எதிர்பாராதவகையில் அந்தோணி, கருணாகரன் ஆகியோர் மீது மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் இறந்தனர். இது குறித்து மேலேமருவத்தூர் காவல்துறை ஆய்வாளர் ராமதாஸ் நேரில் சென்று விசாரணை செய்தார்.

இது குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.