எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சென்னை ஐஐடி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை சரியானது: எச்.ராஜா

மத ரீதியிலான மோதலை தடுக்க சென்னை ஐஐடி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை சரியானதுதான் என்ற  பாஜக தேசிய செயலர் எச்.ராஜா, ஒரு மதத்துக்கு எதிராக நோட்டீஸ் வெளியிட்டோர் மீது

News image
Updated On :31 மே 2015, 11:39 am

செல்வ முத்துகுமாரசாமி

மத ரீதியிலான மோதலை தடுக்க சென்னை ஐஐடி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை சரியானதுதான் என்ற  பாஜக தேசிய செயலர் எச்.ராஜா, ஒரு மதத்துக்கு எதிராக நோட்டீஸ் வெளியிட்டோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பாஜக தேசிய செயலர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

சென்னை ஐஐடியில் அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம், கல்லூரி வளாகத்தினுள் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐஐடி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை மிகச்சரியானது. இந்து மதத்துக்கு எதிராக மாணவர் ஒருவர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளார். இதன் பொருட்டு மத மோதல்கள் உருவாகாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளை செய்த மாணவர்களை மாற்றுச்சான்றிதழ் கொடுத்து வெளியேற்றவேண்டும். சாதாரண இப்பிரச்னையை திமுக தலைவர் மு.கருணாநிதி போராட்டத்துக்கான விஷயமாக கையில் எடுப்பது தவறானது. இது தொடருமானால் தேசிய சக்திகள் ஒன்றிணையும்.

டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது தன்னை மிரட்டினார் என கூறியுள்ளார். தான் அவரை மிரட்டவில்லையெனக் கூறவே மன்மோகன்சிங் மோடியை சந்தித்தார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு கவனம் செலுத்துகிறார். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் எடுத்த முயற்சிகள் நல்ல நிலையில் மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. இப்பிரச்னை இதுவரை முடிவுக்கு வராமல் இருப்பதற்கு திமுகவே முக்கிய காரணம். 1974-ல் வாய்ப்பு இருந்தும் திமுக அதனை செய்யவில்லை. ஆர்.கே. நகர் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடுவது குறித்து பாஜக ஓரிரு நாளில் தீர்க்கமான முடிவை அறிவித்துவிடும்.

நிலம் கையக விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தீய சிந்தனையுடன் செயல்படுகிறது. எப்படியாவது மோடியின் செல்வாக்கை குறைக்கவேண்டும். மோடியால் நாடு வளர்ச்சியடைந்துவிடக்கூடாது என அக்கட்சிகள் நினைக்கிறது. நாடு முழுவதும் பாஜக நடத்தும் 5 ஆயிரம் பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களுக்கு அவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறோம்.  புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது. புதுவை அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கும் என்றார் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.