விருதுநகரில் ஏ.டி.எம். காவலாளியிடம் தகராறு: மூவர் கைது
விருதுநகரில் ஏ.டி.எம். காவலாளியிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மூவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.


விருதுநகரில் ஏ.டி.எம். காவலாளியிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மூவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர், எம்.ஜி.ஆர். சிலை அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளியாக லட்சுமிநகரைச் சேர்ந்த முத்தையா (65) என்பவர் உள்ளார். இவரிடம் குடிபோதையில் அல்லம்பட்டியைச் சேர்ந்த கிலாவந்தி ராஜா (25), மணிகண்டன் (24), ராஜா (25) ஆகிய மூவரும் வந்து தகராறு செய்துள்ளார்கள்.
இது குறித்து விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் முத்தையா புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...