அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விருதுநகர் மாவட்டத்தில் நவ.14-ல் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்டங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 14-ம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

News image
Updated On :9 நவம்பர் 2015, 1:43 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 14-ம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களையும் பொருட்டு வட்ட அளவில் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டு, மக்களின் குறைகளைக் கேட்டு, அவற்றிற்கு உடனடி தீர்பு காணப்படவேண்டுமென உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களையும் பொருட்டு குறைதீர்க்கும் நாள் கூட்டம் அன்றைய தினம் கீழ்கண்ட இடங்களில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.

ராஜபாளையம் தாலுகா, சொக்கலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, பூவாணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. சிவகாசி தாலுகா, புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடம். சாத்தூர் தாலுகா, சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம். விருதுநகர் தாலுகா, சத்திரரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடை. அருப்புக்கோட்டை தாலுகா, குலசேகரநல்லூர் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடம். காரியாபட்டி தாலுகா, மாந்தோப்பு கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம். திருச்சுழி தாலுகா, வி.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள சேவை மையம் ஆகிய இடங்களி்ல் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு தாலுகாவிலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தி, பொதுமக்களிடமிருந்து கோரி்க்கை மனுக்களைப் பெற்று, அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கை மீதான தீர்வுகளை உடன் முடிவு செய்திட வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் இக் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் கலந்து கொண்டு, பொது விநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதனைத் தெரிவித்தும், குடும்ப அட்டைகள் தொடர்பான பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களையும் அளித்து தீர்வு காணலாம்.

மேலும் பொது விநியோக திட்டம் தொடர்பான குறைகளை 94450-00927, 94450-00353 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். வாட்ஸ் அப் மூலம் 94981-88701 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் என ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.