அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி ஊழியர்களை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து தாக்குதல்: மூவர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கொசு மருந்து அடிக்கச் சென்ற நகராட்சிப் பணியாளர்களை மது போதையில் ஆபாசமாகப் பேசி தாக்கிய மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :17 நவம்பர் 2015, 8:16 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கொசு மருந்து அடிக்கச் சென்ற நகராட்சிப் பணியாளர்களை மது போதையில் ஆபாசமாகப் பேசி தாக்கிய மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம், திருமங்கலம், லட்சுமியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் மோசஸ் (32). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் கள உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

இவரும் நகராட்சியில் பணிபுரியும் நல்லகுற்றாலபுரம் தெருவைச் சேர்ந்த காளியப்பன் மகன் சந்தனக்காளை என்பவரும் மங்காபுரம் பகுதியில் நோய்தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்க திங்கள்கிழமை இரவு சென்றுள்ளார்கள்.அப்போது மங்காபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் இருவர் மது போதையில் நகராட்சிப் பணியாளர்கள் இருவரையும் அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து, ஆபாசமாகப் பேசி தாக்கியுள்ளார்கள்.

இது குறித்து மோசஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.